சீனாவில் பயன்படுத்தப்பட்ட அந்நிய முதலீடு அதிகரிப்பு
2023-02-21 16:21:39

சீன வணிக அமைச்சகம் பிப்ரவரி 20ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் சீனாவில் பயன்படுத்தப்பட்ட அந்நிய முதலீடு 12769 கோடி யுவானாகும். கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 14.5 விழுக்காடு அதிகமாகும்.

துறை வாரியாக பார்க்கும் போது, தயாரிப்புத் துறை மற்றும் உயர் தொழில் நுட்பத் துறையில் இந்த விகிதம் முறையே 40.4 மற்றும் 62.8 விழுக்காடாகும். பிரதேசங்கள் வாரியாகப் பார்க்கும் போது, சீனாவின் கிழக்கு, மையம், மேற்கு ஆகிய பிரதேசங்களில் இந்த விகிதம் முறையே 13.4, 25.9 மற்றும் 21.6 விழுக்காடாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.