மேலாதிக்கவாதத்துக்கும் ஆதிக்க அரசியலுக்கும் சீனா எதிர்ப்பு
2023-02-21 14:58:23

உலக பாதுகாப்பு முன்மொழிவு:பாதுகாப்பு குழப்ப நிலையைத் தீர்க்கும் சீனாவின் திட்டம் பற்றிய கருத்தருங்கு 21ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் சீன வெளியுறவு அம்மைச்சர் சின் கேங் கூறுகையில், உலகப் பாதுகாப்பு முன்மொழிவு பற்றிய ஆவணத்தைச் சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஒத்துழைப்புக்கான முக்கிய திசை மற்றும் அமைப்பு முறைமை பற்றி இதில் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அமைதியைப் பேணிக்காக்கும் சீனாவின் பொறுப்பும், உலகளாவிய பாதுகாப்பைப் பேணிக்காக்கும் உறுதியும் இதில் கூறப்பட்டுள்ளன என்றார்.

சீனாவின் வளர்ச்சி, பாதுகாப்பான சர்வதேசச் சூழலில் இருந்து பிரிக்கப்பட முடியாதது. அனைத்து வகையான  மேலாதிக்கவாதத்தையும் ஆதிக்க அரசியலையும் சீனா உறுதியாக எதிர்க்கின்றது. சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடும் எந்தவொரு வெளிநாட்டுச் சக்தியையும் உறுதியாக எதிர்க்கின்றது. தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்கள், சர்வதேச நேர்மை மற்றும் நீதி ஆகியவற்றைச் சீனா உறுதியாகப் பேணிக்காக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.