உலகளவில் அமெரிக்க மேலாதிக்கத்தின் உண்மைகள்
2023-02-21 10:41:35

உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 19ஆம் நாள் அமெரிக்க போர் எதிர்ப்பு ஆர்வலர்கள் வாஷிங்டனில் பேரணியை நடத்தினர். உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை வழங்குவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் நேட்டோவைக் கலைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால்,   ஒரு நாளுக்குப் பிறகு, அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் உக்ரைனில் பயணம் மேற்கொண்டு, உக்ரைனுக்கு ஆயுதங்கள், சாதனங்கள் உட்பட 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள உதவிகளை வழங்க அறிவித்துள்ளார். கடந்த ஆண்டில் ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலுக்கான சூத்திர தாரி இன்றைய மிகப்பெரிய மேலாதிக்க நாடான அமெரிக்கா என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

அமெரிக்க மேலாதிக்கம் மற்றும் அதன் தீங்கு பற்றிய அறிக்கையைச் சீனா 20ஆம் நாள் வெளியிட்டது. ஏராளமான உண்மைகளைக் வெளிக்காட்டுவதன் மூலம் அரசியல், இராணுவம், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், பண்பாடு ஆகிய ஐந்து துறைகளிலிருந்து அமெரிக்க மேலாதிக்கம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலாதிக்கத்திற்காக, மற்ற நாடுகளின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், பிற நாடுகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது, மற்ற நாடுகளின் நலனை விலை கொடுப்பது உள்ளிட்ட அமெரிக்காவின் இச்செயல்கள், சர்வதேசச் சமூகத்தில் கடும் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.