திபெத் மக்களுக்கு பான்செனின் புத்தாண்டு வாழ்த்து
2023-02-21 11:23:31

உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள திபெத் மக்களுக்குத் திபெத் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

2022ம் ஆண்டு திபெத்திலுள்ள பல ஊர்கள் மற்றும் கோயில்களுக்குச் சென்று, விரைவான வளர்ச்சியையும் இன்பமான முகங்களையும் கண்டுள்ளேன். அதிக முன்னேற்றங்கள் பெற்றதால், வறுமை பெரிதும் தணிவடைந்துள்ளது. மக்கள் மத நம்பிக்கையை, சுதந்திரமாகக் கொண்டு, சீரான வாழ்க்கை வாழ்கின்றனர். சோஷலிச சமூகத்துக்கு ஏற்ப, நவீனமயமான புதிய திபெத் வளர்ச்சி பற்றி நான் திபெத் மரபுவழி புத்த மதச் சமூகத்தினர்களுடன் விவாதித்து, கருத்து ஒற்றுமைகளை அடைந்தோம்.

கடந்த ஆண்டு, ஒவ்வொருவருக்கும் சிரமமாக இருந்தது. ஆனால், தொற்றுநோய் மற்றும் இன்னல்கள் நம்மைத் தோற்கடிக்க வில்லை. மாறாக, அவை நமக்கு வலிமை கூட்டி, பரஸ்பர ஆதரவு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைக் கற்பித்தன.

புத்தாண்டில், உயிருக்கு மதிப்பு, இயற்கைக்கு நன்றி மற்றும் நம்மிடம் இருப்பவற்றைப் பேணிமதிப்போம். புத்தாண்டில், சுய வலிமை பெற்று, சிந்தனை ஒழுக்கப் பயிற்சியை மேற்கொண்டு, சீரான மதிப்பு கருத்தை வளர்த்து, குடும்ப நல்லிணக்கத்தைப் பேணிக்காப்போம். புத்தாண்டில், சுய நம்பிக்கை கொண்டு, மகிழ்ச்சியின் விதையை நமது இதயங்களில் விதைத்து, நாம் விரும்பும் பலனைப் பெறுவோம்.

இன்பமான மனதுடன், திபெத் நாட்காட்டின் முயல் ஆண்டை வரவேற்கிறோம். உலக அமைதிக்காகவும், மனித குலத்தின் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்!