சீனாவில் தானியங்கி வாகனத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி
2023-02-21 16:25:34

சீனாவின் பெய்ஜிங் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதியில், பாதுகாப்பாளர் இல்லாத தானியங்கி வாகனத்துக்கான வணிக இயக்கச் சோதனைக்கு 2022ஆம் ஆண்டின் இறுதியில் அனுமதி அளிக்கப்பட்டது.

இதுவரை, பெய்ஜிங், ச்சொங்ச்சிங், வூஹான் ஆகிய 3 நகரங்களில் இத்தகைய இயக்கச் சோதனை துவங்கியுள்ளது. தவிரவும், ஷாங்காய், குவாங்சோ, ஷென்ட்சென் உள்ளிட்ட 10 நகரங்களில், பாதுகாப்பாளருடன் கூடிய தானியங்கி வாகனச் சேவை வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தொலைப்பேசி செயலியின் மூலம் இத்தகைய வாகனங்களை முன்பதிவு செய்யலாம்.

சீனாவின் தானியங்கி வாகனத் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்திப் பொருள் உலகத்தின் முன்னணியில் உள்ளது. பல சீன நிறுவனங்கள் தொடர்புடைய தொழில் நுட்ப ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.