உக்ரைனுக்குப் புதிய சுற்று ராணுவ உதவி: அமெரிக்கா
2023-02-21 14:01:47

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோன் பைடன் 20ஆம் நாள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு திடீரென பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அரசுத் தலைவர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைனுக்கு 50கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள புதிய சுற்று ராணுவ உதவியளிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

700 டாங்கிகள், ஆயிரக்கணக்கான கவச வாகனங்கள், 1000 பீராங்கிகள், 20லட்சத்துக்கும் அதிகமான வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அவற்றில் அடக்கம்.