நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பின் உண்மையைப் புலனாய்வு செய்ய வேண்டிய உரிமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு
2023-02-21 11:03:13

நார்ட் ஸ்ட்ரீம் குழாயை சேதப்படுத்திய செயல் மிகவும் மோசமானது. அதன் உண்மையைப் புலனாய்வு செய்ய வேண்டிய உரிமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு என்று இத்தாலியின் சுதந்திர பத்திரிக்கையாளர் மட்டெயோ கிராசிஸ் அண்மையில் சீன ஊடக குழுமத்திற்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார். அத்துடன், நார்ட் ஸ்ட்ரீம் குழாயை அமெரிக்கா வெடிக்கச் செய்தது பற்றி அமெரிக்க மூத்த புலனாய்வுச் செய்தியாளர் செய்மோர் ஹெர்ஷ் வெளியிட்ட ஆய்வு அறிக்கையைக் குறித்து, அமெரிக்கா நம்பகமான பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், ஹெர்ஷின் அறிக்கை மேற்கத்திய செய்தி ஊடகங்களால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவரின் அறிக்கையில் அம்சங்கள் உண்மையாக இருந்தால், ரஷியா மட்டுமல்ல, ஐரோப்பா குறிப்பாக ஜெர்மனி மீதான அமெரிக்காவின் தாக்குதல் செயல் இதுவாகும்.

நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்புச் சம்பவம் குறித்து சிறப்பு கூட்டத்தை நடத்த ஐ.நா பாதுகாப்பவை பிப்ரவரி 21ஆம் நாள் மாலை ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.