அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் கூற்று தவறு சீனா குற்றச்சாட்டு
2023-02-22 17:38:31

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அண்மையில் சமூக ஊடகத்தில், அமெரிக்காவில் நுழைந்த சீனாவின் ஆய்வுப் பலூன் அமெரிக்க அரசுரிமையை ஊறுபடுத்தியதுடன், சர்வதேசச் சட்டத்தை மீறியது என்று தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 22ஆம் நாள் பிளிங்கனின் கூற்று தவறானது என்று குற்றம்சாட்டினார். அமெரிக்கா நல்லெண்ணத்துடன் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஆயுத ஆற்றலை தாறுமாறாகப் பயன்படுத்தியதால் சீன-அமெரிக்க உறவில் ஏற்பட்ட பாதிப்பைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.