2023இல் இலங்கை திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் தொகை 260 கோடி டாலர்
2023-02-22 17:36:05

கடன் வழங்கிய தரப்புகளுக்கு 260 கோடி அமெரிக்க டாலர் கடன் மற்றும் வட்டி தொகையை இலங்கை 2023ஆம் ஆண்டில் திருப்பித் தர வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் பிப்ரவரி 21ஆம் நாள் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் இருதரப்பு வெளிநாட்டு கடனைத் திருப்பிக் கொடுப்பதை இலங்கை இடைநீக்கம் செய்த பிறகு, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளிலிருந்து கிடைத்த கடனைத் தொடர்ந்து திருப்பிக் கொடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தில் உள்ள போதிலும், உடன்படிக்கை இன்னும் எடப்படாத நிலையில், இலங்கையின் பணத்தை அரசு மிக கவனமாகக் கையாள வேண்டும் என்று நிதி அமைச்சகத்தின் செயலாளர் அமைச்சரவையில் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.