உலக பாதுகாப்புக்காக நடைமுறைக்கு வரக்கூடிய தீர்வு: உலக பாதுகாப்பு முன்னெடுப்பு
2023-02-22 10:40:11

உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பு பற்றிய கருத்து ஆவணத்தைச் சீனா 21ஆம் நாள் வெளியிட்டு முக்கிய ஒத்துழைப்புகளுக்கான 20 திசைகளை முன்வைத்துள்ளது. இம்முன்னெடுப்பின் நடைமுறையாக்கத்துக்கு மேலும் விரிவான நெறிகளை வகுத்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பை முன்வைத்தார். மனிதகுலம் பாதுகாப்பு சவால்களைச் சமாளிப்பதற்கு அது புதிய திசை மற்றும் புதிய கண்ணோட்டத்தை வழங்கியுள்ளது. இதுவரை, 80க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அமைப்புகள் இம்முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அண்மையில் வெளியான கருத்து ஆவணத்தில் மிகப் பெரிய மிக அவசரான சர்தேச பாதுகாப்புக் கவலைகள் குறித்து  20 முக்கிய ஒத்துழைப்பு திசைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐ.நாவின் பங்களிப்பை வெளிக்கொணர்தல், அரசியல் முறையில் சூடான பிரச்சினைகளின் தீர்வை முன்னேற்றுதல், பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற பாதுகாப்பு சவால்களின் சமாளிப்பு, உலகப் பாதுகாப்பு நிர்வாகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் அதில் அடங்கியுள்ளன. மேலும், முன்னெடுப்பின் ஒத்துழைப்பு மேடை மற்றும் அமைப்பு முறை குறித்து முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. நடைமுறைக்கு வரக் கூடிய இந்த நடவடிக்கைகள், மேலதிக நாடுகள் மற்றும் அமைப்புகள் உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பில் இணைவதை ஈர்க்கவுள்ளது. பாதுகாப்பு சவால்களைத் தீர்ப்பதற்கு பல்வேறு தரப்புகள் கூட்டாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

பாதுகாப்பு உலக நாடுகளின் உரிமையாகும். குறிப்பிட்ட சில நாடுகளின் காப்புரிமை அல்ல. உலகம் மேலும் பாதுகாப்பாக இருப்பதை நனவாக்க, பன்னாடுகள் பொறுப்பேற்க வேண்டும். உலகத்துக்கு மேலதிக அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டு வரும்வகையில், பல்வேறு தரப்புகள் உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பில் பங்கேற்று அதன் நடைமுறையாக்கத்துக்குக் கூட்டாக முயற்சி செய்வதைச் சீனா எதிர்பார்க்கிறது.