திபெத் மக்களின் நலவாழ்வுக்கான மேம்பாடு
2023-02-22 16:42:28

பொது மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவதில், இவ்வாண்டு 1370 கோடி யுவானை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் பிப்ரவரி 21ஆம் நாள் அறிவித்தது.

எல்லைப் பகுதியிலுள்ள மக்களுக்கு நிதியுதவி வழங்குவது, திபெத்திற்கான மருத்துவ நிபுணர்களின் உதவிக்கு ஆதரவு அளிப்பது, கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரமான எல்லை பகுதிகளில் ஆக்ஸிஜன் வழங்கும் வசதிகளை மேம்படுத்துவது ஆகியவை இம்முதலீட்டுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன என்று திபெத் அரசு தெரிவித்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4000 மீட்டர் உயரமான இடத்தில் அமைந்துள்ள திபெத், கடுமையான குளிர் மற்றும் ஆக்ஸிஜன் குறைவு போன்ற நிலவியல் அமைப்பைக் கொண்டு உள்ளது. அதனால், உள்ளூர் மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும் உள்ளூர் அரசுத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, மக்களின் நலவாழ்வை மேம்படுத்தும் விதம் 38 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.