சீன-ரஷிய நெடுநோக்கு பாதுகாப்பு கலந்தாய்வு அமைப்பின் தலைவர்கள் பேச்சுவார்த்தை
2023-02-22 16:52:16

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் இயக்குநர் வாங்யீ, 21ஆம் நாள்மாஸ்கோவில், ரஷிய கூட்டாட்சிப் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் பாத்லுயேவுடன் சீன-ரஷிய நெடுநோக்கு பாதுகாப்பு கலந்தாய்வு அமைப்பின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தற்போதைய சர்வதேச நெடுநோக்கு நிலைமை குறித்து இருவரும் விவாதித்தனர்.

பலதரப்பு கட்டுக்கோப்பிலுள்ள ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, உலக நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு கூட்டாக முயற்சி செய்ய இருதரப்பும் ஒப்புகொண்டன. ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தை உறுதியாகப் பேணிக்காத்து, பனிப் போர் சிந்தனை, குழுப் போட்டி, சித்தாந்த பகைமை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும் என்று இருதரப்பும் கருதுகின்றன.

உக்ரைன் பிரச்சினை பற்றியும் இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறி கொண்டனர்.