வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க விரும்பும் சீனத் தொழில் நிறுவனங்கள்
2023-02-22 19:50:12

2022ஆம் ஆண்டு சீனத் தொழில் நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீட்டின் நிலவரம் மற்றும் திட்டம் பற்றிய ஆய்வு அறிக்கையை சர்வதேச வர்த்தக முன்னேற்றுத்கான சீனக் கவுன்சில் பிப்ரவரி 22ஆம் நாள் வெளியிட்டது. கடந்த ஆண்டில் சீனத் தொழில் நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு சீராக வளர்ந்து வந்துள்ளது. கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தற்போதைய முதலீட்டு அளவை தக்கவைக்க அல்லது விரிவாக்க உள்ளன. 80 விழுக்காட்டுக்கும் மேலான நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டின் எதிர்கால வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளன. சுமார் 90 விழுக்காடு நிறுவனங்கள் ஆர்சிஇபி நாடுகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளன என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 71.8 விழுக்காடு நிறுவனங்கள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளில் முதலீடு செய்வதற்கும், 48.7 விழுக்காடு நிறுவனங்கள் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதற்கும் முன்னுரிமை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.