செழுமையுடன் திகழும் பண்டைய நகர்
2023-02-22 20:03:58

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய சீனா பற்றி அறிந்து கொள்ள விரும்பினால், சிஆன் நகரத்தில் பயணம் மேற்கொள்ளுங்கள் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தெரிவித்துள்ளார்.

நிண்டகால அமைதி மற்றும் நிலைப்பு என்ற பொருள் கொண்ட சாங்ஆன் எனும் பெயரில் இந்நகரம் அழைக்கப்பட்டிருந்தது. இங்குள்ள வரலாற்று மற்றும் நாகரிக அடையாளங்கள், சீன வரலாற்றில் மிக செழுமையான காலத்திற்குச் சான்று போன்றது. இந்நகரத்தின் சுற்றுச் சுவர், வெறும் வரலாற்றின் அடையாளம் அல்ல, அது இந்நகரின் உயிரோட்டமான ஒரு பதிவும் ஆகும்.

இந்தச் சுவரின் மேல் பயணம் மேற்கொண்டு உலகளவில் மேலதிக பயணிகளை ஈர்க்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தனது சிஆன் பயணத்தின்போது விருப்பம் தெரிவித்தார்.

முயல் ஆண்டின் தொடக்கத்தில் நகரச் சுவரைச் சுற்றிலும் காணப்படும் விறுவிறுப்பான காட்சி, பொது மக்களின் சுவை நிறைந்த வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது. தொன்மையான சிஆன் நகரம் தற்காலத்திலும்  செழுமையுடன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.