உக்ரைன் நெருக்கடிக்கு மேலை நாடுகள் பொறுப்பேற்க வேண்டும்:புதின்
2023-02-22 10:05:47

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 21ஆம் நாள் ரஷிய நாடாளுமன்றத்தில் ஆண்டுக்கான அறிக்கையை வழங்கினார். சிறப்பு ராணுவ நடவடிக்கை, நவீன சர்வதேச உறவு, புதிய புவிசார் அரசியலிலுள்ள ரஷிய பொருளாதாரம், சமூக வளர்ச்சி முதலியவை இவ்வறிக்கையின் முக்கிய பகுதிகளாகும்.

புதின் கூறுகையில், சிறப்பு ராணுவ நடவடிக்கை குறித்து, ரஷியா திட்டத்தின்படி தொடர்ந்து  கவனமான மனப்பான்மையுடன் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றும். மேலை நாடுகள், மோதலைத் தூண்டுவது, மோதலைத் தீவிரமாக்குவது மற்றும் உயிரிழப்பு அதிகரிப்புக்கு முற்றிலும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

2001ஆம் ஆண்டு முதல், உலகளவில் அமெரிக்கா கிளப்பிய போர்கள் மற்றும் மோதல்களில் சுமார் 9 இலட்சம் பேர் உயிரிழந்தனர். 3.8 கோடி மக்கள் அகதிகளாக மாறினர். தற்போது உலகில் நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ளன. மேலும், மேலை நாடுகள், உக்ரைனுக்கு ராணுவ ஆதரவளிக்கும் விதம், 15 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவிட்டுள்ளன. பிராந்திய மோதலை, உலகளாவிய பகைமையாக மாற்றும் செயல்பாடுகளுக்கு, ரஷியா பதில் நடவடிக்கை எடுக்கும். தடை மூலம் ரஷிய பொருளாதாரத்தை ஒடுக்கும் சதி பலிக்காது என்றும் புதின் வலியுறுத்திக் கூறினார்.