உள்மங்கோலியாவில் நிலக்கரி சுரங்க விபத்து மீட்புப் பணிக்கு ஷி ச்சின்பிங் உத்தரவு
2023-02-22 19:56:27

உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் அல்க்ஸா லீக் பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று 22ஆம் நாள் இடிந்து விழுந்த விபத்து குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உத்தரவு பிறப்பித்தார். இவ்விபத்தில் காணாமல் போனவர்களை முழுமூச்சுடன் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளித்து, பொது மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பையும் சமூகத்தின் நிலைத்தன்மையையும் பயனுள்ள முறையில் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.