அமெரிக்க சமூகத்தில் தீரா நோய் போன்ற ஏழை-பணக்கார இடைவெளி
2023-02-23 18:46:00

அமெரிக்காவில் ஏழை-பணக்கார இடைவெளி மோசமாகி வரும் உண்மைகள் பற்றிய அறிக்கை பிப்ரவரி 23ஆம் நாள் வெளியிடப்பட்டது. உண்மைகள் மற்றும் தரவுகளின் மூலம் அமெரிக்காவில் ஏழை-பணக்கார இடைவெளியின் நிலவரம், இப்பிரச்சினைக்கான அரசியல் மற்றும் சமூகக் காரணங்கள், அதன் பாதிப்புகள் ஆகியவை இவ்வறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

உலகளவில் முதலாவது பெரிய பொருளாதார சமூகமாகவும், மிக பெரிய ஏழை-பணக்கார இடைவெளி உள்ள மேலை நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது. 1970ஆம் ஆண்டுகளிலிருந்து அமெரிக்காவில் வருமானத்தின் சமமற்ற நிலை மோசமாகி வருகிறது. கோவிட்-19 நோய் தொற்று பரவிய பிறகு அமெரிக்கா மேற்கொண்ட நிதி ஊக்குவிப்பு நடவடிக்கை, ஏழை மக்கள் இன்னல்களைத் தீர்ப்பதற்கு உதவாமல், பணக்காரர்கள் செல்வத்தை விரிவாக்க உதவியுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூலதன ஏகபோகம், தேர்தல் அரசியல், அரசு கொள்கைகள், தொழில் சங்க ஆற்றல் குறைப்பு, இனவெறி பாகுபாடு உள்ளிட்டவை அமெரிக்காவின் ஏழை-பணக்கார இடைவெளிக்குக் காரணங்களாகும். கடும் சமூகப் பிரச்சினையாக மாறியுள்ள இந்த இடைவெளி, அமெரிக்காவின் ஜனநாயக மனித உரிமைக்கு கறையாக அமைந்துள்ளது. இப்பிரச்சினை மோசமாகி வரும் நிலைமையை அமெரிக்கா சரிவர நோக்கி, அடிமட்ட மக்களின் குரலைக் கேட்டறிந்து இதற்கான தீர்வுமுறையைக் காண வேண்டும் என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.