கொழும்பு துறைமுக நகரில் 87 ஆயிரம் வேலை வாய்ப்புகள்: இலங்கை அமைச்சர்
2023-02-23 16:22:56

எதிர்வரும் சில ஆண்டுகளில் கொழும்பு துறைமுக நகரத் திட்டப்பணி மூலம் சுமார் 87 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைய மசோதா பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில் அவர் மேலும் கூறுகையில், இலங்கையை பொருளாதார மையமாக உருவாக்குவதில் இத்திட்டப்பணி முக்கியப் பங்காற்றும் என்றும், கடந்த காலத்திலிருந்து இலங்கை படிப்பினையைக் கற்றுக் கொண்டு, பொருளாதாரக் கட்டுமானத்துக்கு முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.