சின் காங்-காவ் கிம்ஹோன் சந்திப்பு
2023-02-23 16:49:19

சீன வெளியுறவு அமைச்சர் சின் காங், 22ஆம் நாள் ஜகர்தாவில் ஆசியான் தலைமை செயலாளர் காவ் கிம்ஹோனுடன் சந்திப்பு நடத்தினார்.

சின் காங் கூறுகையில்,

சீன-ஆசியான் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு சீராக வளர்ந்து வருகின்றது. அமைதி நிதானம் செழுமை அழகு மற்றும் நட்புறவு படைத்த தாயகங்களின் கட்டுமானத்தை  ஆசியானுடன் இணைந்து முன்னேற்றவும் இருதரப்பு பன்முக நெடுநோக்கு கூட்டுறவின் அம்சங்களை தொடர்ந்து அதிகரிக்கவும் சீனா விரும்புகின்றது என்று தெரிவித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்புகளையும் கிழக்காசிய ஒத்துழைப்புகளையும் கூட்டாக முன்னேற்றுவதில் ஆசியான் செயலகத்தின் பணிகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்  என்றும் அவர் தெரிவித்தார்.

நீண்டகால நோக்கில் ஆசியான் ஒருமைப்பாட்டு ஆக்கப்பணிக்கு தனது கவனத்தையும் ஆதரவையும் அளித்து வரும் சீனாவுக்கு காவ் கிம்ஹோன் நன்றி தெரிவித்தார்,

3.0 பதிப்பிலான சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலம் பற்றிய பேச்சுவார்த்தையை விரைவுப்படுத்தவும், பிராந்திய பன்முக பொருளாதாரக் கூட்டுறவு பற்றிய உடன்படிக்கையின் சீராக நடைமுறையாக்கத்தை முன்னேற்றவும் செயல்படும் என்று இருதரப்பினரும் தெரிவித்தனர்.