ரஷிய அரசுத் தலைவர் புதின் வாங்யீயுடன் சந்திப்பு
2023-02-23 10:07:36

ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் புதின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் இயக்குநர் வாங்யீயுடன் பிப்ரவரி 22ஆம் நாள் மாஸ்கோவில் சந்தித்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது வாங்யீ கூறுகையில், தற்போது சர்வதேச நிலைமை சிக்கலாகவும் தீவிரமாகவும் உள்ளது. ஆனால், சீன-ரஷிய உறவு சர்வதேச அறைகூவல்களை தாண்டி, நிலைத்தன்மையாக இறுக்கிறது. நவ யுகத்தில் இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு எந்த மூன்றாவது தரப்பையும் குறிவைக்காது. சீனா ரஷியாவுடன் இணைந்து பரஸ்பர அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி நெடுநோக்கு ரீதியிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்திப் பயனுள்ள ஒத்துழைப்புகளை விரிவாக்கி இரு நாடுகளின் நியாயமான நலன்களைப் பேணிக்காக்க விரும்புகிறது. உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இரு நாடுகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு ஆற்ற விரும்புகிறது என்று வாங்யீ தெரிவித்தார்.

சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகள் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது சர்வதேச உறவின் ஜனநாயகமயமாக்கம், உலக ஒழுங்குமுறையின் சமநிலை மற்றும் நிலைத்தன்மைக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்று புதின் கூறினார்.

உக்ரைன் பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொண்டனர். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று ரஷியா மீண்டும் வலியுறுத்தியதற்கு வாங்யீ பாராட்டு தெரிவித்தார். இப்பிரச்சினையில் சீனா எப்போதும் புறநிலை மற்றும் நியாயமான நிலைப்பாட்டைப் பின்பற்றி அரசியல் வழியாக நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.