அரசியல் மற்றும் தூதாண்மை வழியாக நெருக்கடியைத் தீர்க்க ரஷ்யா தயாராகியுள்ளது
2023-02-23 14:44:31

ரஷியாவின் டாஸ் செய்தி நிறுவனம் 23ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, அரசியல் மற்றும் தூதாண்மை வழியாக சிறப்பு ராணுவ நடவடிக்கைகளின் இலக்கை நனவாக்குவதற்கு ரஷியா தயாராகி உள்ளது என்று அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் கலுசின் தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் மற்றும் கீவ் வட்டாரம் ஆயுதங்களை கைவிட்டு ரஷிய நகரங்கள் மீதான ராணுவத் தாக்குதலை நிறுத்தினால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருக்கும் என்றும் அவர் கூறினார்.