அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவது அவசியம்!
2023-02-23 16:23:38

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தவுள்ளதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் குழு 22ஆம் நாள் இவ்வாண்டின் முதல் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், வட்டி விகித உயர்வைத் தணிவுபடுத்துவதற்கு அதிகாரிகள் பலர் ஆதரவு தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பணவீக்கம் தணிவடைந்து வருகிறது என்று அண்மைகாலத்தின் அறிகுறிகள் எடுத்துக்காட்டியுள்ளன. இருப்பினும், 2விழுக்காடு என்ற நீண்டகால இலக்கை விட, , அது இன்னும் பெருமளவில் உயர்வாக உள்ளது. அதே வேளை, தொழிலாளர் சந்தை இன்னும் அளவுக்கு மீறிய பதற்றத்தில் இருக்கிறது. ஆகையால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்துவது அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.