வெடிப் பொருளுக்கான கட்டுப்பாடு பற்றிய சீனாவின் கருத்து
2023-02-23 17:36:27

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பிப்ரவரி 23ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவில் சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்களுக்கான கட்டுப்பாடு தளர்வாக உள்ளது. நீண்டகாலமாக அரசு சாரா குழுக்கள் அல்லது நபர்களுக்கு இராணுவப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அமெரிக்கா, பிற நாடுகளின் உள் விவகாரத்தில் வெளிப்படையாகத் தலையிட்டு, இராணுவ மோதல் மற்றும் சமூகக் கலவரத்தைத் தூண்டி வருகிறது. கூடவே, பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதி தீவிரவாதச் சக்திகளுக்கு அதிகமான வெடிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச மற்றும் பிரதேச அமைதிக்கும் நிலைத் தன்மைக்கும் இது கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றார்.

மரபு வழி வெடிப் பொருள் விவகாரத்துக்கான ஐ.நாவின் பணிக்கூட்டம் பிப்பரவரி 13 முதல் 17ஆம் நாள் நடைபெற்றது. சர்வதேசச் சமூகம் வெடிப் பொருளுக்கான கட்டுப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்று சீனா இக்கூட்டத்தில் வழங்கிய ஆவணம் ஒன்றில் வேண்டுகோள் விடுத்தது. பல வளரும் நாடுகள் இதற்கு ஆதரவு அளித்தன. ஆனால் அமெரிக்கா இந்த ஆவணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.