பிரிட்டனில் பற்றாக்குறைக்குள்ளாகி வரும் பழங்கள் மற்றும் காய்கறிகள்
2023-02-24 11:33:44

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளின் பற்றாக்குறை சுமார் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் என்று பிரிட்டனின் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரசா காஃபி அம்மையார் உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 23ஆம் நாள் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சினைகளை எவ்வாறு தவிர்ப்பது குறித்து தொடர்புடைய அரசு அதிகாரிகள் சில்லறை விற்பனையாளர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

இந்த வாரம், தக்காளிப்பழம், பச்சை மிளகாய், வெள்ளரிக்காய் முதலிய பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதை பிரிட்டனில் உள்ள பல பேரங்காடிகள் கட்டுப்படுத்தத் தொடங்கின.