கிழக்கு இந்தோனேசியாவின் கடற்பரப்பில் நிலநடுக்கம்
2023-02-24 14:40:23

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள வடக்கு மலுகு மாகாணத்துக்கு  அருகிலுள்ள கடற்பரப்பில் 24ஆம் நாள் அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் 112 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. இந்நிலநடுத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்பு பற்றி இன்னும் தகவல் தெரியவில்லை.

இந்த நிலநடுக்கம் குறித்து இந்தோனேசியா சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.