அரசியல் வழிமுறையில் உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதில் சீனாவின் நிலைப்பாடு பற்றிய ஆவணம் வெளியீடு
2023-02-24 11:14:48

அரசியல் வழிமுறையில் உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதில் சீனாவின் நிலைப்பாடு என்ற ஆவணத்தைச் சீன வெளியுறவு அமைச்சகம் 24ஆம் நாள் வெளியிட்டது.

இந்த ஆவணத்தில் குறிப்பிட்டதாவது:

முதலாவது, பல்வேறு நாடுகளின் இறையாண்மைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இரண்டாவது, பனிப்போர் சிந்தனையைக் கைவிட வேண்டும். மூன்றாவது, போரை நிறுத்த வேண்டும். நான்காவது, அமைதிக்கான பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும். ஐந்தாவது, மனித நேய நெருக்கடியைத் தீர்க்க வேண்டும். ஆறாவது, அப்பாவி மக்கள் மற்றும் போர் கைதிகளைப் பாதுகாக்க வேண்டும். ஏழாவது, அணு மின்சார நிலையத்தின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும். எட்டாவது, நெடுநோக்கு ரீதியிலான அபாயத்தைக் குறைக்க வேண்டும். ஒன்பதாவது, தானியங்களின் போக்குவரத்தை உறுதிப்படுத்த வேண்டும். பத்தாவது, ஒரு தரப்புத் தடை நடவடிக்கையை நிறுத்த வேண்டும். பத்தினொன்றாவது, தொழில் சங்கிலி விநியோகத்தின் நிலைப்புத் தன்மையை உத்தரவாதம் செய்ய வேண்டும். பன்னிரண்டாவது, போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பை முன்னேற்ற வேண்டும்.