சீனாவில் நீண்டகாலமாக வளர்ச்சியடைய விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள்
2023-02-24 11:33:11

சீனாவில் அந்நிய முதலீடு நிலையான வளர்ச்சியை நிலைநிறுத்தி வருகின்றது. பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் நீண்டகாலமாக வளர்ச்சியடைய விரும்புவதை இது முழுமையாகக் காட்டியுள்ளது என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஷு யூட்டிங் அம்மையார் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.  

இவ்வாண்டின் ஜனவரியில், முழு சீனாவிலும் நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட அந்நிய முதலீட்டில் தொகை,12769 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 14.5 விழுக்காடு அதிகமாகும்.

அண்மையில், சீனாவில் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கையின் மாற்றுத்துடன், பல பன்னாட்டு நிறுவன நிர்வாகிகளும் சீனாவுக்குத் திரும்பி வருகின்றனர். இதனிடையே, சீனாவில் வணிகப் பயணம் மேற்கொள்ளவும் பல பன்னாட்டு நிறுவனத் தலைமையகங்கள், சீன வணிக அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.