அமெரிக்காவின் ஆய்வு மீது சீனா சந்தேகம்
2023-02-24 19:02:20

சீனாவின் ஆளில்லா வான்கப்பல் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் ஆய்வு பற்றிய கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பிப்ரவரி 24ஆம் நாள் பதிலளிக்கையில், இந்த ஆய்வின் சுதந்திரத் தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மை சந்தேகத்துக்குள்ளானது என்று தெரிவித்தார்.

எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் சீனாவின் சிவில் வான்கப்பலை உளவு பலூன் என அமெரிக்கா அவதூறு பரப்பி, ஆயுதப் பலத்தை தாறுமாறாகப் பயன்படுத்தியுள்ளது. சிகாக்கொ பொது ஒப்பந்தத்தின் கடப்பாட்டையும் சர்வதேச சட்டத்தின் பல அடிப்படைக் கோட்பாடுகளையும் அது வெளிப்படையாக மீறியுள்ளது என்று வாங் வென்பின் குறிப்பிட்டார்.

மறைமுக வழிமுறையில் ஒரு சார்பாக செயல்படும் அமெரிக்கா, ஆய்வின் நிலைமை பற்றி தெரிவிக்குமாறு சீனா கோரியுள்ளது. ஆனால் இதற்கு மறுமொழி அளிக்க அமெரிக்கா மறுத்தது. இந்நிலையில், இந்த ஆய்வின் சுதந்திரத் தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மை மீதான பெரும் சந்தேகத்தை சீனா தெரிவிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய ஆய்வு நம்பகத் தன்மை அற்றது என்றும் அவர் தெரிவித்தார்.