பசுமை எரியாற்றலின் நிலையான வளர்ச்சிக்கு இந்திய அரசு முயற்சி
2023-02-24 16:54:48

பசுமை எரியாற்றல் துறையில் நிலையான வளர்ச்சிக்கு இந்திய அரசு முழுமூச்சுடன் செயல்படுவதாக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

மின்சார வாகனங்களின் நன்மைகள் பற்றி கன ரக தொழிற்துறை அமைச்சர் பதிவேற்ற சுட்டுரைக்கு மறுமொழியாக மோடி இவ்வாறு கூறினார்.

மேலும், பசுமை எரியாற்றல் துறையில் முதலீடு செய்ய உலகத்துக்கு அழைப்பு விடுத்துள்ள அவர், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் துறையில் இந்தியாவின் உள்ளார்ந்த ஆற்றல் தங்கச் சுரங்கம் அல்லது எண்ணெய் வயல் போன்று உள்ளது என்றும் அழுத்தம்பட தெரிவித்தார்.