உலக சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கான சீனாவின் பங்கு
2023-02-24 17:30:19

சுற்றுலா துறையை மீண்டும் முழுமையாக திறந்த சீனா  உலக சுற்றுலாத் துறையின் மீட்சிக்குப் பங்காற்றும் என்று ஐ.நா உலக சுற்றுலா அமைப்பு 23ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

உலக சுற்றுலா அமைப்பின் தகவல் படி, புதிய ரக கரோனா வைரஸ் பரவலுக்கு முன், உலகில் மிகப் பெரிய சுற்றுலா சந்தையாக சீனா திகழந்தது. 2019ஆம் ஆண்டு 16 கோடியே 60 இலட்சம் சீனர்கள் சர்வதேச சுற்றுலா பயணம் மேற்கொண்டதுடன் 27 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைச் செலவழித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளின் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர்.

மேலும், சீன உள் நாட்டு சுற்றுலாத் துறையின் மீட்சி, சீனாவுக்கும் உலகிற்கும் மேலதிகமான உயிராற்றலை வழங்கும் என்றும் இவ்வமைப்பு தெரிவித்தது.