ஐரோப்பிய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ரஷியா மீதான பொருளாதாரத் தடை
2023-02-24 11:30:49

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் மைக் வால்லேஸ் 22ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், கடந்த ஓராண்டில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷியாவின் மீது பல சுற்று தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இது, ஐரோப்பிய சமூகத்திலும் பொருளாதாரத்திலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தடைகளால் அமைதியைக் கொண்டுவர முடியாது எனக் குறிப்பிட்ட அவர், அதனால் ஐரோப்பாவின் சொந்தமான நெருக்கடியை மோசமாக்கியுள்ளதை உண்மைகள் நிரூபித்துள்ளன என்பதையும் சுட்டிக் காட்டினார்.

எரியாற்றல் துறையில் ரஷியாவுடனான தொடர்பை விரைவாக துண்டித்துக் கொண்டுள்ள ஐரோப்பா, எரியாற்றல் ரீதியிலான சுதந்திரத் தன்மையை மேம்படுத்த முடியாது. மாறாக, அது, அமெரிக்காவின் நலன்களுக்குப் பொருதியது என்றும் அவர் குறிப்பிட்டார்.