14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் பரந்த பிரதிநிதிகள்
2023-02-25 17:43:53

13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் 39ஆவது கூட்டம் 24ஆம் நாள் 2,977 பிரதிநிதிகளின் தகுதியை உறுதிப்படுத்தியது. அவர்களில், 442 பிரதிநிதிகள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மொத்தப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலும் இவர்கள் 14.85 விழுக்காடாக உள்ளனர். பெண் பிரதிநிதிகள் 790 பேர் ஆவர். இவர்கள், மொத்தப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலும் 26.54 விழுக்காடாக உள்ளனர். இது முந்தைய அமர்வுடன் ஒப்பிடும் போது 1.64 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் 497 பேர். இவர்கள் மொத்த பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலும் 16.69 விழுக்காடாக உள்ளனர்.  இது 0.99 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது.