உலகப் பொருளாதார மீட்சிக்கு மோடி வேண்டுகோள்
2023-02-25 17:44:25

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி 24ஆம் நாள், ஜி20 நாடுகள் குழுவின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் கூட்டத்தில் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். அப்போது உலகப் பொருளாதாரத்தின் நிதானம், நம்பிக்கை மற்றும் அதிகரிப்பை மீட்டெடுக்க, உலகின் முக்கிய பொருளாதாரச் சமூகங்கள், நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இது பற்றி அவர் கூறுகையில், தற்போதைய உலகில், நோய் பரவலின் பாதிப்பு, புவிசார் அரசியல் நெருக்கடி தீவிரம், சர்வதேச விநியோகச் சங்கிலி துண்டிப்பு, பணவீக்கம், தானிய மற்றும் எரியாற்றல் பாதுகாப்புப் பிரச்சினை, கடன் பிரச்சினை, சர்வதேச நாணய நிறுவனங்களின் செல்வாக்கு குறைப்பு முதலிய பல சவால்கள் காரணமாகப் பொருளாதாரப் பாதிப்பு நிகழ்ந்து வருகின்றது. எனவே, உலகப் பொருளாதாரம் மீது, பல்வேறு வட்டாரங்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், உலகின் முக்கிய பொருளாதாரச் சமூகங்கள், உள்ளடக்கத் தன்மை வாய்ந்த நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.