பசிபிக் தீவு நாடுகள் மன்றச் சிறப்புத் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம்
2023-02-25 18:57:51

பிப்ரவரி 24ஆம் நாள் பசிபிக் தீவு நாடுகள் மன்றச் சிறப்புத் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் ஃபிஜியில் நிறைவடைந்தது.

இதில், ஜப்பானின் அணு மாசுபட்ட நீர் கடலுக்குள் விரைவில் வெளியேற்றப்படுவது குறித்து பசிபிக் தீவு மன்றத் தலைவர்கள் முக்கியமாக விவாதித்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடலின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு அணு மாசுபட்ட நீரினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் பன்னாடுகளின் விவாதம் சர்வதேசச் சட்டம், சுயாதீனமான மற்றும் சரிபார்க்கக்கூடிய அறிவியல் மதிப்பீடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் இம்மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஜப்பான் மற்றும் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்துடன் தீவிர உரையாடலுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் தெரிவித்தனர்.