உக்ரைன் மோதல் பற்றிய சீனாவின் நிலைப்பாட்டு ஆவணம் முக்கியமான பங்காகும்: ஐ.நா
2023-02-25 18:51:53

உக்ரைன் மோதல் பற்றி சீனா வெளியிட்டுள்ள நிலைப்பாட்டு ஆவணம் முக்கியமான பங்காகும் என்று ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் டியாலிக் 24ஆம் நாள் தெரிவித்தார்.

வழமையான செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், சீன அரசு வெளியிட்டுள்ள ஆவணத்தில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கும் அவற்றைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.