உக்ரைன் பிரச்சினையின் தீர்வுக்கு சரியான தேர்வு
2023-02-25 18:46:39

சீன வெளியுறவு அமைச்சகம் 24 ஆம் நாள் அரசியல் வழிமுறையில் உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதில் சீனாவின் நிலைப்பாடு என்ற ஆவணத்தை வெளியிட்டு, நெருக்கடியைத் தீர்ப்பதற்குச் சீனாவின் அறிவுத் திறமையை வழங்கியுள்ளது.

வரலாற்றில் இரு உலகப் போர்கள் மற்றும் பனிப்போரால் உலக மக்கள் துன்பப்பட்டனர். மேலாதிக்க வாதம், கூட்டமைப்பு அரசியல் போன்றவை ராணுவ மோதலுக்கு வழிகாட்டும். அதைப் போல் நடப்பு உக்ரைன் மோதல் மீண்டும் உலகிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா உக்ரைன் மோதலுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட தரப்பு அல்ல. எனினும் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பல முறை முன்வைத்த முன்மொழிவுகளிலிருந்து சீன வெளியுறவு அமைச்சகம் புதிதாக வெளியிட்டுள்ள ஆவணம் வரையில் பார்க்கும் போது இப்பிரச்சினையைச் சீனா கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது புலப்படும்.

மேலும், உக்ரைன் மோதல் வெடிப்பதற்குப் பல சிக்கலான காரணிகள் உள்ளன. அவற்றில், அமெரிக்காவும் நேட்டோவும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் செயல்படுவதை உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதனைப் பொருட்படுத்தாமல் பிரச்சினையை உண்மையாகத் தீர்க்க முடியாது.

உக்ரைன் மோதலின் தீர்வுக்குச் சீனா நடைமுறை செயல்பாட்டுத் திட்டம் வழங்கியுள்ளது. இம்மோதல் துவங்கி ஓராண்டு ஆகிய இத்தருணத்தில் தொடர்புடைய பல்வேறு தரப்புகளும் ஆழ்ந்து யோசித்து அமைதியை மீட்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.