தூதாண்மை வழிமுறையில் உக்ரைன் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்:குட்ரேஸ்
2023-02-25 18:50:45

உக்ரைன் பிரச்சினை பற்றி ஐ.நா பாதுகாப்பவை 24ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் இதில் பேசுகையில், ரஷியாவும் உக்ரைனும் தூதாண்மை வழிமுறை மூலம் மோதலைத் தீர்த்து அமைதிக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இம்மோதலுடன் தொடர்புடைய பல்வேறு தரப்புகள் ஐ.நா சாசனத்தின் கீழ் அமைதிக்காகத் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இக்கூட்டத்தில் ஐ.நாவுக்கான ரஷியாவின் நிரந்தர பிரதிநிதி நியேபியன்ஜா கூறுகையில், அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட மேலை நாடுகள் சொந்த நலன்களை நாடும் வகையில் ரஷிய-உக்ரைன் மோதலைப் பயன்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டித்தார்.