இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.2%
2023-02-26 17:27:44

இந்திய அரசு வாரியம் வெளியிட்ட புதிய ஆய்வு முடிவின் படி, நகரப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களின் வேலையின்மை விகிதம் ஒரு ஆண்டுக்கு முந்தைய 8.7 சதவீதத்திலிருந்து 2022 அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் 7.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வேலையின்மை விகிதம் என்பது வேலை தேடும் தொழிலாளர்களின் சதவீதமாகும்.

கணக்கெடுப்பின்படி, 2021ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.7 சதவீதம் என்ற உச்சத்தைத் தொட்டியது. கரோனா தொடர்பான கட்டுப்பாடுகளினால் ஏற்பட்ட பாதிப்பே அதற்கான காரணமாகும் என்று கருதப்படுகிறது.