ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் கூட்டம் நிறைவு
2023-02-26 16:46:16

ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் கூட்டம் பிப்ரவரி 25ஆம் நாள் இந்தியாவின் பெங்களூரில் நிறைவடைந்தது. கூட்டத்தின் போது, உலகளாவிய நிதிக் கட்டமைப்பு, தொடரவல்ல நிதி, அடிப்படை வசதிகளின் கட்டுமானம், நிதித் துறை முதலிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

ஜி 20 அமைப்பின் நடப்புத் தலைவர் நாடான இந்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உலகின் பல்வேறு நாடுகள் பலவீனமான கடன் பாதுகாப்பு நிலைகளைத் தீவிரமாகத் தீர்க்க வேண்டும். தற்போது, பணவீக்கத்தால் அச்சுறுத்தப்படும் பல்வேறு நாடுகள் இன்னும் கவனமாகப் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.