உக்ரைன் மோதல் பற்றி சீனா வெளியிட்டுள்ள நிலைப்பாட்டு ஆவணத்துக்குப் பன்னாட்டுப் பிரமுகர்கள் வரவேற்பு
2023-02-26 16:43:27

உக்ரைன் மோதல் பற்றி சீனா வெளியிட்டுள்ள நிலைப்பாட்டு ஆவணத்துக்குப் பன்னாட்டுப் பிரமுகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சீனா முன்வைத்த இந்த ஆவணம், ஒரு பெரிய நாட்டின் பொறுப்பை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடரவல்ல அமைதி மற்றும் நீண்டகால அமைதியைப் பெற பேச்சுவார்த்தையில் சகவாழ்வு மற்றும் இணக்க முயற்சி தேவை என்று ஸ்வீடனின் நாடு கடந்த அமைதி மற்றும் எதிர்கால ஆராய்ச்சி நிதியத்தின் நிறுவனர் ஓபெர்ரி கூறினார்.

தென்னாப்பிரிக்காவின் ஆசியா மற்றும் பிரிக்ஸ் விவகாரத்துக்கான சிறப்பு தூதர் சுக்லர் கூறுகையில், இது மிகவும் ஆக்கப்பூர்வமான சமிக்கையாகும். நீடித்த அமைதியைக் கண்டுபிடிக்கச் சீனா பாடுபட்டு வருகின்றது. ஏனெனில் போரில் வெற்றியாளர்கள் என்று யாரும் இல்லை எனக் குறிப்பிட்டார்.