வலுப்படுத்தப்படும் சீனப் பாரம்பரிய மருத்துவச் சேவை
2023-02-26 17:24:05

சீனப் பாரம்பரிய மருத்துவச் சேவை அமைப்புமுறையை வலுப்படுத்தும் வகையில், 2023ஆம் ஆண்டு சீனா பல செயற்பாட்டுத் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படையில், சியூங்ஆன் புதிய பிரதேசத்தில் தேசிய நிலை சீனப் பாரம்பரிய மருத்துவ மையத்தைக் கட்டியமைத்தல், சீனப் பாரம்பரிய மருத்துவத்துக்கும் மேலை நாட்டு மருத்துவத்துக்குமிடையிலான ஒத்திசைவு வளர்ச்சியை முன்னேற்றுதல்,  அடிமட்ட மருத்துவப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், சிறுப்பான்மை தேசிய இன மருத்துவச் சேவை தரத்தை உயர்த்தும் 3 ஆண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.