புத்தாக்கம், பசுமை எரிசக்தித் துறையில் இந்திய-ஜெர்மன் ஒத்துழைப்பு
2023-02-26 17:25:21

இந்தியாவும் ஜெர்மனியும் சனிக்கிழமை அன்று புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பசுமை ஹைட்ரஜன் மற்றும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்ப ஒத்துழைப்பு சார்ந்த  ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

பசுமை வேலைவாய்ப்புத் திறன் குழு மற்றும் ஜெர்மன் கூட்டாட்சி சூரிய ஆற்றல் சங்கம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இரு தரப்புகளும் கையெழுத்திட்டுள்ளன. மேலும், ஆசிய-பசிபிக் மன்றக் கூட்டம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

ஜெர்மன் தலைமை அமைச்சர் ஓலாப் சூல்ஸ் அண்மையில் இந்தியாவில் இரு நாட்கள் நீடித்த பயணத்தை மேற்கொண்டார். இப்பயணத்தின் போது, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்திய அவர்,  இரு தரப்புறவைத் தவிர ரஷிய-உக்ரைன் மோதல் பற்றியும் விவாதித்தார்.