சீனாவின் முதலாவது தொழிற்துறை தரவு மாற்று மேடை
2023-02-26 17:27:39

பிப்ரவரி 25ஆம் நாள் பெய்ஜிங் சர்வதேச பெருந்தரவு சந்தையில் தொழிற்துறை சார்ந்த தரவுககளுக்கான மேடை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இம்மேடை மூலம், தொழில் துறைக்குத் தரவுகளின் பரிமாற்றச் சேவை வழங்கப்படும்.

புதிய உற்பத்திக் காரணியான தரவுகள், உற்பத்தி, விநியோகம், புழக்கம், நுகர்வு, சமூகச் சேவை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரைவாக ஒன்றிணைந்து, உற்பத்தி, வாழ்க்கை மற்றும் சமூக மேலாண்மை வழிமுறையை ஆழமான முறையில் மாற்றி வருகின்றன.

தற்போது சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச, தேசிய மற்றும் மாநில நிலை தரவு சந்தைகளின் எண்ணிக்கை 45 ஐ எட்டியுள்ளது.