சின்ஜியாங்கில் மக்களின் வருமானம் அதிகரிப்பு
2023-02-27 15:23:42

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசின் செய்திப் பணியகம் பிப்ரவரி 27ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2022ஆம் ஆண்டு, வறுமையிலிருந்து விடுபட்டுள்ள மக்களின் வருமான அதிகரிப்புக்கும், விறுமையிலிருந்து மீண்ட பகுதிகளின் வளர்ச்சிக்கும் சின்ஜியாங் அரசு முக்கியத்துவம் அளித்தது. உள்ளூர் கிராமங்களில் தனிச்சிறப்புடைய தொழில்கள் மூலம், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 10 ஆயிரம் யுவானுக்கும் குறைவான வருமானம் கொண்டவர்களின் எண்ணிக்கை 2021இல் இருந்த 9 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 2022இல் இருந்த 2 லட்சத்து 57 ஆயிரத்து 100ஆக குறைந்துள்ளது.