ரஷியாவுக்கு சீனா ராணுவ ஆதரவு தொடர்பான கூற்றுக்கு சீனா பதில்
2023-02-27 19:33:00

தொழில் நிறுவனங்களின் வழியாக, சீனா, ரஷியாவுக்கு கொல்லும் தன்மை அல்லாத உதவியை வழங்கி வருகிறது. தற்போது சீனா கொல்லும் தன்மை வாய்ந்த உதவியை வழங்குவதைக் கருத்தில் கொள்வதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ப்லிங்கன் அண்மையில் கூறினார்.

இதற்கு சீன வெளியுறவு அமைச்சக்கத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் 27ஆம் நாள் பதிலளிக்கையில், சீன-ரஷிய உறவை ஒன்றுக்குப் பத்தாகத் திரித்து குறிப்பிடக் கூடாது. அமெரிக்காவின் அச்சுறுத்தல் மற்றும் நிர்பந்தத்தை சீனா ஏற்றுக்கொள்ள மாட்டாது என்று தெரிவித்தார்.

மேலும், சீனாவின் தைவான் பிரதேசத்தில் இடைவிடாமல் முன்னேறிய ஆயுதங்களை விற்பது குறித்து, அமெரிக்கா விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் மௌ நிங் கோரியுள்ளார்.

தவிரவும், மேற்கூறிய சீன நிறுவனங்களுக்குத் தடை விதிக்க அமெரிக்க அரசு அறிவித்தது. இதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக மௌ நிங் தெரிவித்தார்.