வெங்காய ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் இல்லை – இந்தியா
2023-02-27 09:25:22

இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று ஞாயிற்றுக்கிழமை அரசு தெரிவித்தது.

அதேசமயம், வெங்காய விதைகளின் ஏற்றுமதிக்கு, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில், இந்தியாவில் இருந்து 52.38 கோடி டாலர் மதிப்பிலான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.