இலங்கையில் சுற்றுலா பயணிகளைப் பாதுகாக்கும் செயலி
2023-02-27 11:18:24

சுற்றுலா பயணிகளைப் பாதுகாக்கும் விதம், இலங்கையில் மார்ச் முதல் நாள் தொலைப்பேசி செயலி ஒன்று வெளியிடப்படும் என்று அந்நாட்டு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 25ஆம் நாள் தெரிவித்தார்.

இந்தச் செயலி 7 மொழிகளிலான இந்தச் செயலில் முச்சக்கர வண்டிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட உள்ளன. ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் பயணிகள் முச்சக்கர வண்டிகளிலுள்ள பார்கோடை ஸ்கேன் செய்து புகார் அளிக்கலாம். காவற்துறையினர் மற்றும் சுற்றுலா அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் அந்நிய செலாவணி ஈட்டுவதில் முக்கியமான சுற்றுலா துறை, கோவிட்-19 தொற்றுநோய், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.