© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அமெரிக்காவின் பல இடங்களில் கடந்த வாரம் ஏற்பட்ட குளிர்கால புயலால் மின்தடை ஏற்பட்டது. மிச்சிகன் மாநிலத்தின் தென்கிழக்கிலுள்ள சில பகுதிகளின் மின் வினியோகம் இன்னும் சரிசெய்யப்படவில்லை. பிப்ரவரி 26ஆம் நாள் நண்பகல் வரை 2.1 லட்சம் கடும்பங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது.
இதனிடையே, கலிஃபோர்னியாவின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் காற்று மற்றும் பலத்த மழை காரணமாக மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் விழுந்தன. ஆற்று நீர் மட்டம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. பல உயர்வேக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.