சீனா தற்சார்பாக தயாரித்த முதலாவது கோவிட்-19 எதிர்ப்பு மருந்து வெளியீடு
2023-02-27 15:06:47

கோவிட்-19 நோய்க்கு எதிராக சீனா தற்சார்பாக தயாரித்த முதலாவது புதுமை மருந்து பற்றிய அறிமுகக் கூட்டம் பிப்ரவரி 26ஆம் நாள் ஹாய்கோவ், பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ ஆகிய 4 இடங்களில் ஒரேநேரத்தில் நடைபெற்றது. 600க்கும் மேற்பட்ட மருத்துவத் துறை நிபுணர்கள் இந்நிகழ்வில் நேரடியாக பங்கெடுத்து, சியன்னொசி எனும் இணை தொகுக்கப்பட்ட Simnotrelvir மற்றும் Ritonavir மாத்திரையின் மருந்தகப் பயன்பாட்டின் மதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் நடத்தினர்.

வெளியிடப்பட்ட மருந்தக ஆய்வுத் தரவுகளின்படி, கோவிட்-19 நோயால் சிறிது முதல் இடைநிலை வரையில் பாதிக்கப்பட்ட வயது வந்தவர்களுக்கு இம்மருந்து பெரிதும் பயன் அளிக்கிறது. வைரஸ் அளவை வேகமாகவும் அதிகமாகவும் குறைப்பது, நோய் பாதிப்பு காலத்தைக் குறைப்பது, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அதிகம் ஆகிய நன்மைகளை இம்மருந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.