ஐ.நா மனித உரிமை செயற்குழு கூட்டத்தில் சீனா கருத்து
2023-02-28 17:02:29

27ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 52வது கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சர் ஜின் காங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், பல்வேறு நாடுகளின் உண்மை நிலைக்குப் பொருந்திய மனித உரிமை வளர்ச்சி பாதையில் நடைபோடுவது, பன்முகங்களிலும் பல்வகை மனித உரிமைகளைப் பாதுகாப்பது, சர்வதேச நியாயம் மற்றும் நீதியைப் பேணிக்காப்பது, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்வது ஆகிய 4 அம்சங்களில் சீனா ஊன்றி நின்று வருகிறது என்றும், சீனா, சொந்த நிலைமைக்குப் பொருந்திய மனித உரிமை வளர்ச்சி பாதையில் உறுதியாக நடைபோடும் என்றும் தெரிவித்தார்.

அந்தரங்க நோக்கத்துடன் சில சக்திகள், சீனாவின் சின்ச்சியாங் மற்றும் திபெத் பிரச்சினையை ஊதிப்பெரிதுபடுத்தி, சீனாவின் செல்வாக்கைக் களங்கப்படுத்த முயற்சித்து வருகின்றன. இச்செயல்களுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தப்பு எண்ணம் இல்லாத பன்னாட்டு மக்கள், சீனாவுக்கு வந்து நேரில் பார்வையிட வரவேற்கிறோம் என்றும் ஜின் காங் தெரிவித்தார்.